Thursday, January 29, 2009

பயபுள்ள நல்லா இருக்கணும்...

ஆஹா... நாம எழுதினத கூட படிச்சுட்டு யாரோ comment அனுப்பி இருக்காங்களே.. என்னடா இது உலகத்தோட எட்டாவது அதிசயமா இருக்கு அப்படின்னு சந்தோசமா open பண்ணி பார்த்தா... நம்ம வைகை புயல் வடிவேலு சொல்லற மாதிரி 'நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்' ... பயபுள்ள திட்டி எழுதி இருக்கு..


அது சரி நம்ம என்ன வள்ளுவர் பேரனா.. ஏதோ திட்டி எழுதவாவது ஆள் இருக்கே அப்படின்னு மனச தேத்திக்கிட்டேன்.... வேற என்ன பண்ண.. நம்ம கவுண்டர் சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு.. 'Blog எழுத வந்துட்டா இதுலாம் சகஜமப்பா'..


இங்க பாருங்க பாசு.. நம்ம என்ன சரஸ்வதியின் சபதம் படத்துல வர்ற சிவாஜி கணேசனா.. சாமி வந்து நாக்குல எழுதன ஒடனே சும்மா பிச்சுகிட்டு பாட.. அதுவும் இல்லாம நமக்கு தெரிஞ்ச ஒரே சாமி நம்ம அரவிந்த் சாமி தான்.. பொறந்த குழந்தை கிட்ட சும்மா பாடு பாடுன்னா அது எப்படி பாசு பாடும்... கொஞ்சம் கொஞ்சமா தான் வரும்.. அது மாதிரி தான் பாசு நம்மளும்.. இப்ப தான ஆரம்பிச்சு இருக்கறோம்.. போக போக பாருங்க.. எப்படி பிச்சு உதற போறோம்னு..

எப்படி இருந்தாலும் முத முதலா comment அனுப்பி இருக்கீங்க.. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி பாசு.. பயபுள்ள நல்லா இருக்கணும்..







No comments:

Post a Comment