என்னடா இது... நம்ம பாட்டுக்கு ஒரு blog ஆரம்பிச்சுட்டோம். என்ன எழுதறது தெரியல அப்படின்னு night full ஆ யோசிச்சு பார்த்தேன். தூக்கம் கெட்டதுதான் மிச்சம். அப்படினா இதோட blog ல எழுதறத நிறுத்திடுவோம் னு நெனச்சேன். ஆனா இப்ப இருக்கற situation ல வீடு கூட இல்லாம இருந்திடலாம்.. ஒரு blog இல்லாம இருக்க முடியாது போல. ஒரு மனுசனக்கு சாப்பாடு, துணி, வீடு ரொம்ப அத்யாவசியமுனு சொல்வாங்க. ஆனா இப்ப அத விட blog தான் முக்கியம் னு தைரியமா எறங்கிட்டேன். வள்ளுவரே சொல்லிஇருக்காரே 'எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு' அப்படின்னு....
எதை பத்தி எழுதறது.. ஒன்னுமே புரியலயே னு இருந்தேன். அப்பதான் தோணுச்சுநம்ம தான் எவ்ளோ டப்பா படமா இருந்தாலும் தியேட்டர்ல பார்க்கறமே நம்மளே ஒரு கதை எழுதனா என்னனு ....
எதை பத்தி கதை எழுதறது... நம்மள பத்தி எழுதுவோமா.. ச்சே... நம்மள பத்தி எழுதனா நம்மளே படிக்க மாட்டோம்.. நம்ம இது வரைக்கும் பார்த்த படங்கள்ல இருந்து ஒரு பத்து படத்துல இருந்து உருவி ஒரு புது கதை எழுதுவோம்னு பார்த்தேன்... அப்படினா புது படத்துல இருந்து சுட்டா கண்டு பிடிச்சுருவாங்க... so பழைய படத்துல இருந்து சுடுவோம்னு முடிவு பண்ணினேன்..அப்ப தான் நம்ம ஞாபக சக்தி பத்தி தெரிஞ்சது. காலைல என்ன சாபிட்டோம் அப்படின்னு கை கழுவரதுக்குள்ள நமக்கு மறந்துடுது.. பழைய படம் எங்க ஞாபகம் வர போகுது..
ச்சே.. நம்ம முதல் முதலா கதை எழுதற blog இப்படி கதை இல்லாம நிக்குதே.. இதுக்கு தான் உலக சினிமா உலக இலக்கியம் எல்லாம் படிக்கனும்னு தோணுச்சு.. அது சரி.. நமக்கு தான் கழக கலகத்த பார்க்கவே நேரம் பத்த மாட்டேங்குது.. நம்ம எங்க இருந்து உலக இலக்கியம் படிக்கறது..
சரி பழைய படம் வேணாம்.. புது படத்துல இருந்தே கதைய சுடலாம்னு முடிவு பண்ணினேன்.. பொங்கலுக்கு தான் நம்ம படம் பார்த்தோமே நம்மளே நமக்கு பில்லி சூனியம் வச்ச மாதிரி.. அதுல இருந்து ஏதாவது சுடலாம்னு நெனச்சேன்.. கடைசில தான் தெரிஞ்சது.......... அட மக்கா இப்ப வர்ற படத்துல கதையே இருக்கறது இல்லையே.. இதுல நான் எங்க போயி கதைய சுட...
Subscribe to:
Post Comments (Atom)
this is the very worst blog in my life
ReplyDeletevery bad blog
ReplyDeleteகமெண்ட் அடிக்க வார்த்தையே வரல,
ReplyDeleteகமெண்ட் அடிக்க நான் ரூம் போட்டு யோசிக்கணும்!!!
என்ன கொடுமை பாலா.